/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேம்பாலம் நடுப்பகுதியில் தடுப்பு வைக்க கோரிக்கை
/
மேம்பாலம் நடுப்பகுதியில் தடுப்பு வைக்க கோரிக்கை
ADDED : ஜன 16, 2025 05:29 AM

மேட்டுப்பாளையம் : காரமடை ரயில்வே மேம்பாலத்தின் நடுப்பகுதியில் தடுப்பு வைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், காரமடை நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த மேம்பாலத்தில் சென்று வருகின்றன. மேம்பாலத்தின் நடுப்பகுதியில் எந்த ஒரு தடுப்பும் இல்லாத காரணத்தினால், போக்குவரத்து நெரிசலின் போது பஸ்கள், லாரிகள், கார்கள் போன்ற வாகனங்கள் மேம்பாலத்தின் நின்றுக்கொண்டிருக்கும் வாகனங்களை ஓவர் டெக் செய்து செல்கின்றன.
இதனால் மேம்பாலத்தின் எதிர்புறம் வரும் வாகனங்களுக்கு வழியில்லாத நிலை ஏற்படுகிறது. இந்த மேம்பாலத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இதனை தடுக்க மேம்பாலத்தின் நடுப்பகுதியில் தடுப்பு அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

