/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்த கோரிக்கை
/
ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்த கோரிக்கை
ADDED : அக் 08, 2024 11:51 PM
பெ.நா.பாளையம் : ஆனைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், பன்னிமடை ஊராட்சிக்கு உட்பட்ட தாளியூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 58.10 லட்ச ரூபாய் மதிப்பில் பொது சுகாதார அலகு கட்டடத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சரிடம் ஆனைகட்டி பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில், ஆனைகட்டியில் இதுவரை செயல்பட்டு வந்த தனியார் மருத்துவமனை தற்போது செயல்படுவதில்லை.
ஆனைகட்டி வட்டாரத்தில் வசிக்கும் ஏழை பழங்குடியின மக்கள் சிகிச்சைக்காக, 30 கி.மீ., தொலைவில் உள்ள கோவை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
எனவே, தற்போது ஆனைகட்டியில் ஜம்புகண்டியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி, கூடுதல் படுக்கை வசதிகளுடன், 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவமனையாக மாற்ற அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதில் குறிப்பிட்டிருந்தனர்.