/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தங்கும் விடுதிகளை முறைப்படுத்த கோரிக்கை
/
தங்கும் விடுதிகளை முறைப்படுத்த கோரிக்கை
ADDED : ஆக 19, 2025 09:28 PM
வால்பாறை:
வால்பாறையில் உள்ள தங்கும் விடுதிகளில், உணவு பொருட்களுக்கான கட்டணத்தை முறைப்படுத்த வேண்டுமென, சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறையில், இ-பாஸ் நடைமுறை இல்லாததால், சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர். வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சுற்றுலா வருகின்றனர்.
இந்நிலையில், இங்குள்ள தங்கும் விடுதிகள், ரிசார்ட்கள் நிரம்பி விடுகின்றன. இதை சாதகமாக பயன்படுத்தி சில தங்கும் விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.
ஊட்டி, கொடைக்கானலை விடவும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாலும், உணவு பொருட்களின் விலையை உயர்த்தியதாலும், சுற்றுலா பயணியர் அதிருப்தியடைந்துள்ளனர்.
சுற்றுலா பயணியர் கூறுகையில், 'இங்குள்ள தங்கும் விடுதியில் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். தங்கும் விடுதியில் உள்ள ேஹாட்டல்களில் உணவு பொருட்களுக்கும் அதிக கட்டணம் நிர்ணயித்துள்ளனர். ஆனால், உணவு பொருட்கள் தரமின்றி உள்ளது. இதை முறைப்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து, கட்டணம் குறித்த அறிவிப்பு வைக்க வேண்டும். உணவு பொருட்களை தரமாக வழங்க உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.