/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழில் முதலீட்டு மானிய நிலுவையை விடுவிக்க கோரிக்கை
/
தொழில் முதலீட்டு மானிய நிலுவையை விடுவிக்க கோரிக்கை
தொழில் முதலீட்டு மானிய நிலுவையை விடுவிக்க கோரிக்கை
தொழில் முதலீட்டு மானிய நிலுவையை விடுவிக்க கோரிக்கை
ADDED : நவ 18, 2024 10:55 PM
கோவை; இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள தொழில் முதலீட்டு மானியத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சின்னவேடம்பட்டி தொழிற்சங்கம் (சி.ஐ.ஏ.,) சார்பில், எம்.பி.,யிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, சி.ஐ.ஏ., தலைவர் தேவகுமார் கூறியதாவது:
எம்.எஸ்.எம்.இ., துறை பார்லி., நிலைக்குழு உறுப்பினரான எம்.பி., ராஜ்குமாரைச் சந்தித்து தொழில்துறை சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.
ஜாப் ஆர்டர் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி.,யை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். சின்னவேடம்பட்டி மற்றும் கோவில்பாளையம் பகுதிகளில் இ.எஸ்.ஐ., கிளை மருத்துவமனைகளை துவக்க வேண்டும்.
கோவை மாஸ்டர் பிளானில் எங்கள் பகுதியில் சில க.ச., எண்களை தொழில் மனை பிரிவில் வகைப்படுத்தித் தர வேண்டும்.
மாவட்ட தொழில் மையத்தின் வாயிலாக அளிக்கப்பட்ட தொழில் முதலீட்டு மானியம் மற்றும் உபகரணங்களுக்கான மானியம், கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சின்னவேடம்பட்டியில், தொழிலாளர் தங்கும் விடுதி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

