/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேதமடைந்த கால்வாய் பாலம் தரமாக புதுப்பிக்க கோரிக்கை
/
சேதமடைந்த கால்வாய் பாலம் தரமாக புதுப்பிக்க கோரிக்கை
சேதமடைந்த கால்வாய் பாலம் தரமாக புதுப்பிக்க கோரிக்கை
சேதமடைந்த கால்வாய் பாலம் தரமாக புதுப்பிக்க கோரிக்கை
ADDED : மே 21, 2025 11:13 PM

கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு, குருநல்லிபாளையம் பகுதியில் கால்வாய் பாலம் சேதமடைந்துள்ளது.
கிணத்துக்கடவு, குருநல்லிபாளையத்தில் குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் ரோட்டோரம் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டு, சில மாதங்களுக்கு முன் ரோட்டோரம், 15வது நிதி குழு மானியத்தில் இருந்து, 3.20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கால்வாயுடன் கூடிய சிறு பாலம் அமைக்கப்பட்டது.
ஆனால், ஒரு ஆண்டு கூட நிறைவடையாத நிலையில், இந்த பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. இந்த வழியாக நான்கு சக்கர வாகனங்கள் சென்றாலும், சேதம் பெரிதாகும் நிலை உள்ளது.
இது இப்படியே தொடர்ந்தால், இந்த கால்வாய் பாலம் முழுவதும் சேதமடைய அதிக வாய்ப்புள்ளது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படலாம். இதனால், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
மக்கள் நலன் கருதி, விரைவாக இந்த பாலத்தை சீரமைப்பு செய்ய வேண்டும். மேலும், இது போன்று நடக்காமல் இருக்க வாகனங்களில் லோடு ஏற்றி செல்லும் அளவுக்கு பாலத்தின் தரம் இருக்க வேண்டும்.
மக்கள் கூறுகையில், 'கட்டப்பட்டு ஓராண்டு முடிவதற்குள், பாலம் சேதமடைந்துள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கு, இந்த பாலத்தின் வழியாக வாகனங்களில் கட்டுமான பொருட்களை கொண்டு செல்லும் போது, கூடுதலாக சேதமடையும். அதனால், இந்த பாலத்தை தரமாக புதுப்பிக்க வேண்டும்,' என்றனர்.