/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பராமரிப்பில்லாத நகராட்சி பூங்கா சீரமைக்க கோரிக்கை
/
பராமரிப்பில்லாத நகராட்சி பூங்கா சீரமைக்க கோரிக்கை
ADDED : ஆக 19, 2025 09:26 PM

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே, ரத்தினம் நகரில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை புதுப்பித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட ரத்தினம் நகரில், சிறப்பு தன்னிறைவு திட்டத்தின் கீழ், 9 லட்சம் ரூபாய் மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டது. சுற்றுச்சுவர் அமைத்து மரம், செடி, கொடிகள் வைத்து, பூங்கா மேம்படுத்தப்பட்டது. துவக்கத்தில் பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் விளையாடவும் அதிகளவில் வந்தனர்.
தற்போது, இந்த பூங்கா பராமரிப்பின்றி புதராகவும், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் உடைந்தும் காணப்படுகிறது. நடைபாதை சேதமடைந்து, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
மேலும், பூங்காவுக்குள் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் காலி மதுபாட்டில்கள் குவிந்து, சுகாதாரமின்றி உள்ளது. பூங்காவை, புதுப்பித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என, முல்லைநகர், ரத்தினம் நகர் பகுதி மக்கள் சார்பில் முதல்வரின் தனிப்பிரிவு, சப்-கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பி உள்ளனர்.
ஆனால், பூங்கா சுத்தம் செய்யப்பட்டுள்ளது. பூங்காவை தொடர்ந்து சுத்தமாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது, என, மனுதாரருக்கு நகராட்சி நிர்வாகம் பதில் கடிதம் மட்டுமே அனுப்பியுள்ளது.
பூங்காவை புதுப்பித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுனால், அப்பகுதியினர் அதிருப்தியில் உள்ளனர்.