/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேதமடைந்த ரோடு சீரமைக்க கோரிக்கை
/
சேதமடைந்த ரோடு சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 01, 2025 10:11 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, முத்துக்கவுண்டனூர் பிரிவு முதல் சங்கராயபுரம் செல்லும் ரோடு, சேதமடைந்திருப்பதால் வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
கிணத்துக்கடவு அருகே, சொக்கனூர் ஊராட்சியில் முத்துக்கவுண்டனூர் பிரிவு முதல் சங்கராயபுரம் செல்லும் ரோடு, 2 கி.மீ., தூரம் உள்ளது. இந்த ரோட்டில், விவசாயிகள் விளைபொருள் கொண்டு செல்கின்றனர். ஆனால், இந்த ரோடு பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருப்பதால், ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் இருக்கிறது. குறிப்பாக, மழை காலங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் இந்த ரோட்டை தவிர்த்து வருகின்றனர்.
இவ்வழியில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் விபத்து அச்சத்தில், பயணிக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி இந்த ரோட்டை விரைவில் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.