/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரிக்கை
/
குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரிக்கை
ADDED : செப் 19, 2024 10:21 PM

மேட்டுப்பாளையம்: காரமடை அருகே அம்மன் நகர் பகுதியில், பழுதடைந்து வரும் குடிநீர் தொட்டியை சீரமைத்து தர வேண்டி, மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மருதூர் ஊராட்சியில் 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 12 வார்டுகள் உள்ளன. இதில் 9வது வார்டு அம்மன் நகர் பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி பழுதடைந்துள்ளது. இங்கே 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
குடிநீர் தொட்டியின், பில்லர்கள் மற்றும் பிற பகுதிகளில் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து, கம்பிகள் தெரியும் வகையில் உள்ளது. இந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து, மருதூர் ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், காரமடை வட்டார வளர்ச்சி அலுவலக பொறியாளர்கள் அண்மையில் இத்தொட்டியை ஆய்வு மேற்கொண்டனர். கட்டடம் அதன் உறுதி தன்மையை இழக்காமல் தான் உள்ளது என தெரிவித்தனர். மேலும், அப்பகுதியில் புதிதாக குடிநீர் தொட்டி ஒன்றும் கட்டப்பட உள்ளது, என்றனர்.