/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிதிலமடைந்த மின்கம்பங்கள் மாற்றியமைக்க கோரிக்கை
/
சிதிலமடைந்த மின்கம்பங்கள் மாற்றியமைக்க கோரிக்கை
ADDED : ஜன 08, 2025 10:52 PM

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி நகரில், எஸ்.எஸ்., கோவில் மற்றும் கரிகாலசோழன் வீதி சந்திப்பில், ஆபத்தான நிலையில் உள்ள, மின் கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில், மின் கோட்டத்திற்கு உட்பட்ட ஒவ்வொரு துணை மின்நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
இப்பணியின்போது, மின் கம்பிகள், மின் கம்பங்களின் உறுதித்தன்மை சரிபார்க்கப்படுகிறது. இத்துடன், மின் கம்பிகள் செல்லும் பாதையில், இடையூறாக உள்ள மரம், செடி உள்ளிட்டவை அகற்றப்படுகின்றன.
இருப்பினும், சில, பகுதிகளில், சிதிலமடைந்து ஆபத்தான நிலையில், மின் கம்பங்கள் காணப்படுகின்றன.
பொள்ளாச்சி நகரில், எஸ்.எஸ்., கோவில் மற்றும் கரிகாலசோழன் வீதி சந்திப்பில், சிதிலமடைந்த நிலையில், மின்கம்பங்கள் காணப்படுகின்றன. அவற்றை மாற்றி, புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'நகரின் பல இடங்களில், சிதிலமடைந்த நிலையில், வலுவிழந்த மின்கம்பங்கள் காணப்படுகின்றன. மின் வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு, சிதிலமடைந்த கம்பங்கள் மற்றும் கம்பிகளை மாற்றியமைக்க வேண்டும்,' என்றனர்.

