/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
/
ரோட்டில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
ADDED : அக் 14, 2024 08:16 PM

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, சென்றாம்பாளைத்தில் இருந்து, நெ.10 முத்தூர் மற்றும் சூலக்கல் செல்லும் ரோட்டில், வேகத்தடை அமைக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிணத்துக்கடவு, சென்றாம்பாளையத்தில் இருந்து சூலக்கல் மற்றும் நெ.10 முத்தூர் செல்லும் இணைப்பு ரோடு உள்ளது. இந்த வழியாக வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. வழித்தடத்தில் உள்ள இணைப்பு ரோட்டில், வேகத்தடை இல்லாததால் இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
குறிப்பாக, விவசாயிகள் பலர் இவ்வழியாக கால்நடையை மேய்ச்சலுக்கு அழைத்து வந்து, மாலை நேரத்தில் வீடு திரும்புகின்றனர். உரிய தெருவிளக்கு வசதியும் இல்லாததால் அச்சப்படுகின்றனர். எனவே, வாகன ஓட்டுநர்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி, இணைப்பு ரோட்டில் விபத்தை தடுக்க வேகத்தடையும், தெருவிளக்கு வசதியும் ஏற்படுத்த வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.