/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காந்திநகரில் அனைத்து பஸ்களையும் நிறுத்தி செல்ல கோரிக்கை
/
காந்திநகரில் அனைத்து பஸ்களையும் நிறுத்தி செல்ல கோரிக்கை
காந்திநகரில் அனைத்து பஸ்களையும் நிறுத்தி செல்ல கோரிக்கை
காந்திநகரில் அனைத்து பஸ்களையும் நிறுத்தி செல்ல கோரிக்கை
ADDED : மார் 27, 2025 11:25 PM
மேட்டுப்பாளையம்: காந்திநகரில் அனைத்து சர்வீஸ் பஸ்களும் நிறுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து காந்திநகர் மற்றும் காமராஜ் நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில், மாவட்ட கலெக்டரிடம் விடுத்துள்ள கோரிக்கை மனுவில், கூறியுள்ளதாவது:
மேட்டுப்பாளையத்துக்கும், காரமடைக்கும் இடையே, காந்திநகர் உள்ளது.
காந்திநகரை சுற்றி காமராஜர் நகர், பாரதி எஸ்டேட், மணிகண்டன் நகர், கே.கே., நகர், சேரன் நகர், மலையரசி நகர், முல்லை நகர், எஸ்.என்.ஆர்.வி., நகர், அத்வைத் காலனி, ராகவேந்திரா நகர், ராயல் கார்டன், ஈ.பி., காலனி, பொன்னம்மாள் கார்டன், பெரிய தொட்டிபாளையம் உள்பட 20க்கும் மேற்பட்ட லே அவுட்டுகள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கிருந்து தினந்தோறும் பள்ளி, கல்லுாரிகளுக்கும், வேலைக்கும் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கோவைக்கு சென்று வருகின்றனர். இவர்கள் இருசக்கர வாகனங்களிலும், டவுன் பஸ்களிலும் காரமடை சென்று, அங்கிருந்து சர்வீஸ் பஸ்களில் கோவை செல்கின்றனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் அனைத்து சர்வீஸ் பஸ்களும் காந்தி நகரில் நிறுத்துவதில்லை. அதே போன்று கோவையில் இருந்து வரும் சர்வீஸ் பஸ்கள், காந்தி நகரில் நிற்பதில்லை.
காந்திநகரில் அனைத்து சர்வீஸ் பஸ்களும் நிறுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறியுள்ளனர்.