தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போத்தனுாரில் மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல கோரிக்கை

 போத்தனுாரில் மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல கோரிக்கை

 போத்தனுாரில் மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல கோரிக்கை


ADDED : மார் 12, 2026 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 04:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்களை, போத்தனுார் ஸ்டேஷனில் ஒரு நிமிடம் நிறுத்தி செல்ல கோவை தெற்கு வளர்ச்சி கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் சுவாமிநாதன், சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னாலாலிடம் நேற்று அளித்த கோரிக்கை மனு:

போத்தனுார் - இருகூர் இரட்டை ரயில் பாதை பணிகள் முடிந்தால் ஏராளமான ரயில்கள் போத்தனுார்-கோவை மற்றும் போத்தனுார்-இருகூர் வழித்தடத்தில் இயக்கமுடியும். மேட்டுப்பாளையம்-துாத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் போத்தனுார் சந்திப்பில் நின்று செல்வது மகிழ்ச்சிக்குரியது.

பெங்களூரு சிட்டி-எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்(12677/12678), கோவை-மங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்(22610/22609), எர்ணாகுளம்-காரைக்கால் எக்ஸ்பிரஸ்(16188/16187) ஆகிய ரயில்களை, போத்தனுாரில் ஒரு நிமிடம் நிறுத்தி சென்றால் சுற்றுப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

'அம்ரித் பாரத்' திட்டத்தில் போத்தனுார் ஸ்டேஷன் சர்வதேச தரத்தில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. நாடார் காலனி, நொய்யல் ஆறு அருகே நுழைவு வாயில் இருந்தால், கிழக்கில் இருந்து வரும் வாகனங்கள், ராமநாதபுரம் ரோட்டில் இருந்து ஸ்டேஷனுக்குள் எளிதில் நுழையலாம். ஸ்டேஷன் புதுப்பிப்பு பணிகளை முடியும் முன், எங்கள் கோரிக்கைகள்மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us