/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேகத்தடை அமைக்க சப்-கலெக்டரிடம் கோரிக்கை
/
வேகத்தடை அமைக்க சப்-கலெக்டரிடம் கோரிக்கை
ADDED : நவ 12, 2024 05:33 AM
பொள்ளாச்சி ; பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டியில், வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் மனு கொடுத்து சப் - கலெக்டரிடம் வலியுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமை வகித்தார்.
அம்பேத்கர் மக்கள் இயக்கம் கொடுத்த மனு:
பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில், ஏற்கனவே அமைக்கப்பட்ட வேகத்தடை, ரோடு விரிவாக்கப்பணிக்காக அகற்றப்பட்டது. அதன்பின்னர் அமைக்கவில்லை.
சினிமா தியேட்டர், நந்தினி மஹால், ஊராட்சி ஒன்றிய பள்ளி, காளியம்மன் கோவில் அருகே வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

