/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்லும் தீர்மானத்தில் முடிவு எடுக்க கோரிக்கை
/
காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்லும் தீர்மானத்தில் முடிவு எடுக்க கோரிக்கை
காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்லும் தீர்மானத்தில் முடிவு எடுக்க கோரிக்கை
காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்லும் தீர்மானத்தில் முடிவு எடுக்க கோரிக்கை
ADDED : ஜூலை 25, 2025 09:07 PM
கோவை; கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்புக்கூட்டம், கலெக்டர் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா முன்னிலை வகித்தார்.
விவசாயிகள் கூறியதாவது:
தமிழக அரசு விளைபயிர்களை, சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டது. அதில் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ள, நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று பல முறை வலியுறுத்திவிட்டோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிப்பதாக சொல்கின்றனர். இதுவரை வனத்துறையினரின் கணக்குப்படி மொத்தம் 17 காட்டுப்பன்றிகளை கடந்த ஆறு மாதங்களில் பிடித்துள்ளனர். இது மொத்தத்தில் 5 சதவீதம் கூட இல்லை.
காட்டுப்பன்றிகளை சுட்டுவீழ்த்த, போதுமான துப்பாக்கிகளும் இல்லை, மாதம்பட்டிக்கு வந்த வனத்துறையினர் காட்டுப்பன்றியை சுட்டுவீழ்த்த, போதுமான துப்பாக்கியோ, குண்டுகளோ இல்லை.
கோவையில் விளைநிலங்களில் உள்ள, பயிர்களை காப்பாற்ற வேண்டும், முழுமையான அறுவடையை எடுக்க வேண்டுமென்றால், மாவட்ட நிர்வாகம் முக்கிய முடி வு எடுக்க வேண்டும். அரசிடம் அனுமதி பெற்று, காட்டுப்பன்றிகளை சுட்டு அழிக்க வேண்டும்.
வடவள்ளி, பி. என்.புதுார் பகுதிகளில் மாலை நேரங்களில் புதர்மண்டிய பகுதிகளில் காட்டுப்பன்றிகள் மேயத்துவங்கிவிடுகின்றன.
இதே நிலை தொடர்ந்தால் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்யும் நிலை ஏற்படும்.
இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.
கலெக்டர் அதிகாரிகளோடு ஆலோசித்து பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண்பதாக கூறினார்.