/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் குழாயை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
/
குடிநீர் குழாயை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
குடிநீர் குழாயை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
குடிநீர் குழாயை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ADDED : மார் 07, 2024 04:29 AM
உடுமலை, : விருகல்பட்டி கிராமத்தில், குடிநீர் வினியோகத்துக்கான குழாய்களை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளனர்.
குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்டது விருகல்பட்டி ஊராட்சி. ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில், இரு நாட்களாக குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது.
இது குறித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள மனு:
விருகல்பட்டி ஊராட்சி கிராமங்களுக்கு, குடிநீர் வினியோகம் செய்வதற்காக நிலத்தடி நீர் தேக்க தொட்டி உள்ளது.
இத்தொட்டிக்கு செல்லும் பிரதான குழாய் மற்றும் கேட் வால்வை அக்கிராமத்தை சேர்ந்த இருவர், சேதப்படுத்தியதால், குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது.
பொதுச்சொத்தை சேதப்படுத்தியவர்கள் மீது, குடிமங்கலம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நபர்கள் மீது வழக்கு பதிந்து, கைது செய்ய வேண்டும்.
இல்லாவிட்டால், நிலத்தடி நீர்த்தேக்க தொட்டி அருகில் சங்கத்தின் சார்பில், காத்திருப்பு போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு, மனுவில், தெரிவிக்கப்பட்டுள்ளது.