தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஊழல் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 ஊழல் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 ஊழல் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


ADDED : மார் 05, 2026 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 04:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: விதிகளுக்கு புறம்பாக பணி நியமனம் செய்தவர்கள் மீது 'கிரிமினல்' நடவடிக்கை எடுக்குமாறு, மாநகராட்சி அமைச்சு பணியாளர்கள் முறையிட்டுள்ளனர்.

தமிழ்நாடு மாநகராட்சி அமைச்சுப் பணியாளர் சங்க தலைவர் சுப்ரமணியன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்:

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் துணை கலெக்டர் பதவியில் இருப்பவர்களை மதுரை, கோவை,திருச்சி, நெல்லை, சேலம் மாநகராட்சிகளில் தலா இருவர் வீதம், 10 பேர் உதவி கமிஷனர்களாக நியமிக்கப் பட்டுள்னர்.

இதனால் அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விதிகளுக்கு புறம்பாக பதவி நியமனம் செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்து அவர்களது தாய் துறையான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கே திருப்பி அனுப்ப வேண்டும்.

இவ்வாறு நியமனம் செய்துஅரசாணை பிறப்பிக்க காரணமான ஊழல் அதிகாரிகள் மீதும், நகராட்சி நிர்வாக துறையின் அனுமதி பெறாமல் பணியில் சேர அனுமதித்த சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்கள் மீதும், தக்க கிரிமினல் நடவடிக்கை மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us