/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனுக்கு பஸ் இயக்க கலெக்டரிடம் கோரிக்கை
/
போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனுக்கு பஸ் இயக்க கலெக்டரிடம் கோரிக்கை
போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனுக்கு பஸ் இயக்க கலெக்டரிடம் கோரிக்கை
போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனுக்கு பஸ் இயக்க கலெக்டரிடம் கோரிக்கை
ADDED : செப் 09, 2025 06:45 AM

கோவை; கோவை கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தலைமை வகித்தார்.
வெள்ளலுார் சுற்றுப்பகுதி பொதுமக்கள், வெள்ளலுாரில் மாநகராட்சி குப்பை கிடங்கு இருப்பதால், நிலத்தடி நீர் மாசடைந்ததாக, பாட்டில்களில் குடிநீரை நிரப்பி வந்து காண்பித்தனர். வெள்ளலூர் குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
டாஸ்மாக் ஊழியர் சம்மேளன மாவட்ட தலைவர் ஜான் தலைமையில், பிழைப்பூதியம், போனஸ், ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 60 ஆக உயர்த்தி, கோரிக்கைகளை நிறைவேற்றி, தொழிலாளர் நல சட்டங்களை அமல்படுத்த வலியுறுத்தினர்.
போத்தனுார் ரயில் பயனர்கள் சங்கத்தினர், ஆத்துப்பாலத்தில் பாதாள சாக்கடை பணி நடந்ததால் பஸ்கள் போத்தனுாருக்கு வந்து செல்லவில்லை. பணிகள் முடிந்த பின்பும், பஸ்கள் இயக்கப்படுவதில்லை. போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் செல்ல, போதுமான பஸ்கள் இயக்க வேண்டும் என மனு அளித்தனர்.
மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் தலைமையில், சுந்தராபுரம் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், அதற்கேற்ப நெடுஞ்சாலைத்துறையுடன் ஆலோசனை மேற்கொண்டு, புதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
காரமடை ஒன்றியம் காளம்பாளையம் கிரமத்தில் நடக்கும் கொள்ளை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமென, அக்கிராம விவசாயிகள் வலியுறுத்தினர்.
மதுக்கரை மரப்பால விரிவாக்க பணி நடப்பதால், பழைய எல் அண்டு டி பை பாஸ் சாலையில் வாகனங்கள் செல்கின்றன. அவ்வழியே செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு நடை ஒன்றுக்கு 55 ரூபாய் சுங்கச்சாவடியில் செலுத்த வேண்டியுள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டுமென, திருமலையம்பாளையம், எட்டிமடை, பிச்சனுார், நவக்கரை, மாவுத்தம்பதி கிராம மக்கள் வலியுறுத்தினர்.
மேட்டுப்பாளையம் இரும்பறை கிராமத்தை சேர்ந்த இளங்கோவன், காயத்ரி தம்பதியர், வீட்டிலேயே பிரசவம் பார்த்து, மூன்று குழந்தைகள் பெற்றிருக்கின்றனர். சுகாதார செவிலியர்கள், போலீசார் எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்தியதாக புகார் கிளம்பியது. சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. அதை நடைமுறைப்படுத்தக்கோரி, மனு கொடுத்தனர்.
கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி, நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலெக்டர் அலுவலக வராண்டாவில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசாரும், அதிகாரிகளும் சமாதானம் செய்தபின், அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.