/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: படிவங்களை பூர்த்தி செய்ய உதவி தேவை மாவட்ட நிர்வாகத்துக்கு வேண்டுகோள்

ADDED : நவ 09, 2025 11:19 PM

கோவை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில், வீடு தேடி வந்து படிவங்களை கொடுக்கின்றனர். அதற்கு பதில் அவர்களே விபரங்களை கேட்டு பூர்த்தி செய்து, கையெப்பம் பெற்றுச்செல்ல வேண்டும் என்று, வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) பணிகள் கடந்த 4ம் தேதி முதல் நடந்து வருகிறது. மக்கள் மத்தியில் இந்த பணி, வரவேற்பு பெற்றுள்ளது.
இது தொடர்பாக, மக்கள் என்ன நினைக்கின்றனர்?
வள்ளியப்பன், காட்டூர் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி வரவேற்புக்குரியது. இறந்து போனவர்கள், வீடு காலி செய்து வெளியூருக்கு மாறி சென்றவர்களை அடையாளம் கண்டு நீக்க வசதியாக இருக்கும். இதனால் ஓட்டுப்பதிவு சதவீதம் சரியாகவும், துல்லியமாகவும் இருக்கும்.
ராஜேஸ்வரி, சரோஜினி வீதி, ராம்நகர் வீடு வீடாக விண்ணப்பங்களை தருகின்றனர். அதை பூர்த்தி செய்யவும் ஆள் அனுப்ப வேண்டும். அதில் பாகம் எண், சட்டசபை தொகுதி எண், வரிசை எண், வார்டுஎண் ஆகியவை கேட்கப்பட்டுள்ளது. இது பற்றி விபரம் தெரிந்தவர் இருந்தால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்.
ஜெயச்சந்திரா, பட்டேல் சாலை, வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றிய விழிப்புணர்வு, மக்கள் மத்தியில் போதுமானதாக இல்லை. ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும். எதற்காக வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்கின்றனர் என்பதை புரிய வைக்க வேண்டும். அப்போது இப்பணி இன்னும் எளிதாகும்.
தினேஷ், ரேஸ்கோர்ஸ் இளம் வாக்காளர் நான். இது வரை எனக்கு படிவம் வழங்கப்படவில்லை. இனிமேல் கொடுப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால் என் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. நேரில் படிவம் கிடைக்கும் போது, சந்தேகத்தை கேட்டு நிவர்த்தி செய்து கொள்வேன்.
விஷ்ணு, பீளமேடு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நவீனப்படுத்தப்பட வேண்டும். ஆன்லைனில் புதுப்பிக்கும் பணிக்கான தொழில்நுட்பரீதியான விஷயங்களை எளிமைப்படுத்த வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.