/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் போட்டிகள்
/
பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் போட்டிகள்
ADDED : நவ 09, 2025 11:18 PM

கோவை: கோவைப்புதுார், வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில், பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும், 'விவா யுவா' நிகழ்ச்சி நடந்தது.
'அறிவுப்பூர்வமான மற்றும் நிலையான நல்வாழ்வுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்' என்ற கருப்பொருளில் நடைபெற்ற நிகழ்வில்,வி.எல்.பி. கல்வி நிறுவன அறக்கட்டளையின் தலைவர் சூர்ய குமார் தலைமை வகித்தார்.
கோவை பாரதியார் பல்கலையின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இயக்குநர் கதிர்வேலு, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த, 35 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1,200 மாணவர்கள் பங்கேற்றனர். சிறந்த படைப்பாற்றலை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறை இயக்குனர் பிருந்தா, முதல்வர் கலைவாணி மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

