/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயிகளை அச்சுறுத்த வேண்டாம்: பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை
/
விவசாயிகளை அச்சுறுத்த வேண்டாம்: பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை
விவசாயிகளை அச்சுறுத்த வேண்டாம்: பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை
விவசாயிகளை அச்சுறுத்த வேண்டாம்: பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை
ADDED : அக் 22, 2025 11:22 PM
கோவை: கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டம், மாநில தலைவர் கந்தசாமி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
வாளையார் அணையில் வண்டல் மண் எடுக்க, பாலக்காடு கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என, தமிழக பொதுப்பணித் துறை தெரிவிக்கிறது. ஆனால், அணையையொட்டிய பகுதிகளில், விவசாயம் செய்பவர்களை வெளியேறும்படி, 'தமிழ்நாடு நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் சட்டம் 2007'ன் படி, தமிழக பொதுப்பணித்துறை நோட்டீஸ் வழங்குகிறது. இந்த அச்சுறுத்தலை அதிகாரிகள் கைவிட வேண்டும்.
ஆந்திர மாநிலம் குப்பம், மல்லைனூர் பாங்கநத்தம் ஏரியின் உபரி நீரை, பச்சனூர் நாட்றாம்பள்ளி சரஸ்வதி ஆற்றுக்கு, 5 கி.மீ., கால்வாய் வெட்டி திருப்பி விட, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை செட்டிபாளையம் பேரூராட்சி, காடு குட்டையில் இருந்து, செட்டிபாளையம் பெரிய குட்டைக்கு வரும் நீர்வழிப்பாதையை தூர்வாரி, செப்பனிட வேண்டும்.
மேட்டுப்பாளையம் தாலுகா, தோலாம்பாளையம் கிராமத்தில், ரயத்துவாரி பட்டா நிலங்களில் குடியிருக்கும் விவசாய குடும்பங்களுக்கு, அவரவர் பெயரில் பட்டா வழங்க வேண்டும்.
தமிழகத்தில், 45 மின் குறைதீர் மன்றங்களில், 35 மன்றங்களில் உறுப்பினர்கள் இல்லை. அங்கு தகுதியான நபர்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

