/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்முலாம் பூசும் தொழில் ஆரஞ்சுக்கு மாற்ற கோரிக்கை
/
மின்முலாம் பூசும் தொழில் ஆரஞ்சுக்கு மாற்ற கோரிக்கை
மின்முலாம் பூசும் தொழில் ஆரஞ்சுக்கு மாற்ற கோரிக்கை
மின்முலாம் பூசும் தொழில் ஆரஞ்சுக்கு மாற்ற கோரிக்கை
ADDED : ஜன 08, 2025 11:39 PM
கோவை; மின் முலாம் பூசும் தொழிலை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சிவப்புப் பட்டியலில் இருந்து நீக்கி, ஆரஞ்சு பட்டியலில் சேர்க்க வேண்டும் என, 'கொடியா' கோரிக்கை விடுத்துள்ளது.
'எலக்ட்ரோ பிளேட்டிங்' எனப்படும் மின்முலாம் பூசுதல் என்பது மோட்டார் பம்ப், வெட் கிரைண்டர், வாகன உதிரிபாகங்கள், பிரிண்டிங் இயந்திரங்கள், ஜவுளித்துறை இயந்திரங்களுக்கான பாகங்கள், போர்வெல் உதிரிபாகங்கள் உள்ளிட்டவை துருப்பிடிக்காமலும், அதிகம் தேய்மானம் ஆகாமலும் இருக்க மேற்கொள்ளப்படுவதாகும்.
இத்தொழிலை சிவப்புப் பட்டியலில் இருந்து ஆரஞ்சு பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என, கோவை மாவட்ட மின்முலாம் பூசுவோர் சங்கம் (கொடியா) கோரிக்கை விடுத்துள்ளது.
கொடியா செயலாளர் ஜெயக்குமார் கூறியதாவது:
அரை நூற்றாண்டுக்கும் மேலாக கோவையின் தொழில்துறை வளர்ச்சியில் மின் முலாம் பூச்சுத் தொழில் முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது. குரும்பபாளையம் பகுதியில் இதற்கான தொழிற்பூங்கா, 11 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது.
எலெக்ட்ரோ பிளேட்டிங் சார்ந்த பாடம் நாகர்கோவில் ஐ.டி.ஐ.,யில் சிறப்புப் பாடப்பிரிவாக கற்பிக்கப்பட்டு வந்தது; 2000ம் ஆண்டு நீக்கப்பட்டுவிட்டது.
காரைக்குடியில் உள்ள மத்திய அரசின் மின் வேதியியல் ஆய்வுக் கூடத்தில் அளிக்கப்பட்டு வந்த பயிற்சியும் 3 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டுவிட்டது.
இப்பயிற்சிகளை கோவை மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி மையம் வாயிலாக கற்பிக்க வேண்டும்.
இத்தொழிலை மேற்கொள்பவர்கள் பெரும்பாலும் சிறிய அளவிலேயே நடத்தி வருகிறோம். சராசரியாக தினமும், 200 முதல் 300 லிட்டர் நீரையே பயன்படுத்துகிறோம்.
இதில் வரக்கூடிய கழிவு மற்றும் கழிவு நீர் குறைவாகவே உள்ளது. எனவே, எங்கள் தொழிலை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சிவப்புப் பட்டியலில் இருந்து ஆரஞ்சுப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

