தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பேரூராட்சி வழித்தடத்தை அகலப்படுத்த கோரிக்கை

பேரூராட்சி வழித்தடத்தை அகலப்படுத்த கோரிக்கை

பேரூராட்சி வழித்தடத்தை அகலப்படுத்த கோரிக்கை


ADDED : செப் 25, 2024 10:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2024 10:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட ஜெ.பி. நகர், சீனிவாசா நகர் வழியாக பாலாஜி கார்டன் வரையில் செல்லும் பாதையை அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பா.ஜ., முன்னாள் ராணுவ பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், முருகன் ஆகியோருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டில் இருந்து ஜெ.பி. நகர், சீனிவாசா நகர் வழியாக பாலாஜி கார்டன் வரையில் மக்கள் அதிகமாக வசிக்கும் குடியிருப்புகளுக்கு செல்வதற்கு வீரபாண்டி பேரூராட்சிக்கு சொந்தமான, 10 அடி மற்றும், 13 அடி அகல வழித்தடங்கள் மத்திய அரசின் அச்சகத்தின் வடக்கு எல்லையோரமாக உள்ளது.

மக்கள் போக்குவரத்திற்கு தந்த வழித்தடம் அகல குறைவாக அமைந்துள்ளதால், வழித்தடத்தை 30 அடி அகல வழித்தடமாக மாற்ற வேண்டி மத்திய அரசிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன. இது தொடர்பாக நகர்ப்புற வளர்ச்சி துறை மற்றும் இந்திய அரசு அச்சகத்துறையிடம் இருந்து பெறப்பட்ட கடிதத்தில், சாலையை அகலப்படுத்த கேட்கின்ற இடம் பாச்சூர் இந்தியா நிறுவனத்தின், 30 ஏக்கர் இடத்தில் வருவதாக பதில் அளித்துள்ளனர்.

தற்போது பாச்சூர் இந்தியா அலுவலர்கள், மத்திய பொதுப்பணித்துறை வாயிலாக வடக்கு புற எல்லையோரமாக சுமார் பத்து அடி உயரத்துக்கு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

அந்த மதில் சுவர் பஞ்சாயத்து ரோட்டில் எல்லையோரமாக தான் அமைகிறது. பாச்சூர் இந்தியா தற்போது கட்டப் போகிற சுற்றுச்சுவர் தற்போதைய வீரபாண்டி பேரூராட்சி ரோட்டில் இருந்து, 20 அடி தள்ளி கட்டினால் ரோட்டின் அகலம், 30 அடியாக அமைந்துவிடும். பின்னர் அந்த ரோட்டை பாச்சூர் இந்தியா நிறுவனமும், பொதுமக்களும் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும். மேலும், மேற்கு புறம் உள்ள செல்வபுரம் குடியிருப்பு வாசிகளும், மருத்துவ வாகனங்கள் பள்ளி, கல்லூரி வாகனங்கள் வர ஏதுவாக இருக்கும்.

விவசாயம் செய்யும் மக்களும் அதிக பயன் பெறுவர் என, அதில் குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us