/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதுமார்க்கெட் ரோட்டை விரிவுபடுத்த கோரிக்கை
/
புதுமார்க்கெட் ரோட்டை விரிவுபடுத்த கோரிக்கை
ADDED : ஜன 30, 2025 11:19 PM
வால்பாறை: வால்பாறை புதுமார்க்கெட் ரோட்டை விரிவுபடுத்த வேண்டும், என, மா.கம்யூ., கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
வால்பாறை தாலுகா மா.கம்யூ., கட்சியின் செயலாளர் பரமசிவம், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
வால்பாறை நகராட்சியில், எந்த ஒரு வளர்ச்சிப்பணியும் முறையாக நடப்பதில்லை. நல்லகாத்து - சோலையாறு செல்லும் ரோடு செப்பனிடப்பட்டு ஓராண்டு கூட முடியாத நிலையில்,  பல இடங்களில் ரோடு குண்டும்,  குழியுமாக உள்ளது.
வால்பாறை நகராட்சியில் வளர்ச்சிப்பணி என்ற பெயரில் மக்கள் வரிப்பணம் வீணடிப்பதை தடுக்க வேண்டும். புதுமார்க்கெட் பகுதியில் நகராட்சி கடைகளை செல்வாக்கு மிக்க அரசியல் கட்சினர், ஆக்கிரமிப்பு செய்து கடைகளை நீட்டிப்பு செய்துள்ளனர். இவர்கள் பெயரளவிற்கு நகராட்சிக்கு சொற்பமான வாடகையை செலுத்தி வருகின்றனர்.
புதுமார்க்கெட் நுழைவுவாயில் முதல் மீன் கடை வரையில் ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், வாகனங்கள் செல்ல முடியாமலும், மக்கள் ரோட்டில் நடந்து செல்ல முடியாமலும் தவிக்கின்றனர். எனவே புதுமார்க்கெட் பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி அதிகாரிகள் பாரபட்சமின்றி அகற்ற, மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

