sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நிலுவைத்தொகை வழங்க தொழிற்சங்கம் கோரிக்கை

/

நிலுவைத்தொகை வழங்க தொழிற்சங்கம் கோரிக்கை

நிலுவைத்தொகை வழங்க தொழிற்சங்கம் கோரிக்கை

நிலுவைத்தொகை வழங்க தொழிற்சங்கம் கோரிக்கை


ADDED : அக் 11, 2024 10:16 PM

Google News

ADDED : அக் 11, 2024 10:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, குறைக்கப்பட்ட சம்பளத்துக்கான நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

'தி ஹில்ஸ் ப்ளாண்டேஷன் ஒர்க்கேர்ஸ் யூனியன்' (ெஹச்.எம்.எஸ்.,) தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் மாணிக்கம், தமிழ்நாடு தொழிலாளர் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்கள், கடந்த, 2000ம் ஆண்டு வரை தினக்கூலியாக, 76.85 ரூபாய் பெற்று வந்தனர். தேயிலை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறி, எஸ்டேட் நிர்வாகங்கள், தொழிலாளர்கள் சம்பளத்திலிருந்து, 4.85 ரூபாய் குறைத்து, 72 ரூபாய் தினக்கூலியாக வழங்கின.

இதே போல், 2022ல் நடந்த புதிய சம்பளப்பேச்சு வார்த்தையில் குறைந்தபட்சக் கூலிக்கு குறைவாக (ரூ.425.25) இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, தினக்கூலியாக, 390 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது.

எனவே, 2000ம் ஆண்டில் குறைக்கப்பட்ட சம்பளத்திற்கான நிலுவைத்தொகையும், 2022ல் ஏற்படுத்தப்பட்ட இடைக்கால ஒப்பந்தப்படி தொழிலாளர்களுக்கு குறைக்கப்பட்ட கூலிக்கான (ரூ.35.25) நிலுவைத்தொகையினையும், உடனடியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us