/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரியல் எஸ்டேட் துறைக்கு 'ரெரா' எதிரானது அல்ல: ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பேச்சு
/
ரியல் எஸ்டேட் துறைக்கு 'ரெரா' எதிரானது அல்ல: ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பேச்சு
ரியல் எஸ்டேட் துறைக்கு 'ரெரா' எதிரானது அல்ல: ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பேச்சு
ரியல் எஸ்டேட் துறைக்கு 'ரெரா' எதிரானது அல்ல: ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பேச்சு
ADDED : அக் 12, 2025 12:48 AM

கோவை:தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (ரெரா) சார்பில் ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம் - 2016 குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, கோவையில் நேற்று நடந்தது.
அதில், 'ரெரா' தலைவர் சிவ்தாஸ் மீனா பேசியதாவது:
முன்பு வீடு கட்டுவதில் தாமதம், பணத்தை பெற்றுக்கொண்டு பணிகள் இழுத்தடிப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு, நுகர்வோர் கோர்ட் மட்டுமே தீர்வாக இருந்தது.
தற்போது 'ரெரா' சட்டம், வீடு கட்டுவோருக்கும், புரமோட்டர்களுக்கும் இணைப்பு பாலமாக இருந்து தீர்வு வழங்குகிறது.
நாட்டில் 1.51 லட்சம் கட்டுமானம் சார்ந்த திட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும், 31 ஆயிரத்து, 179 திட்டங்கள். மஹாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழகத்தில் இத்திட்டங்களின் பங்கு, 21 சதவீதமாக உள்ளது.
ஆனால், புகார்களின் அடிப்படையில் பார்க்கும்போது மொத்த புகார்களில், 2 சதவீதம் மட்டுமே இங்கிருந்து வருகிறது.
புரமோட்டர் மற்றும் வீடு வாங்குபவர்கள் இடையே, சமநிலை கொண்ட ஒப்பந்தம் இருக்க வேண்டும் என்பதே 'ரெரா' நோக்கம். வாங்குபவர்களுக்கும், விற்பவர்களுக்கும் இடையே சமநிலையுள்ள பரிமாற்றம் இருந்தால், ரியல் எஸ்டேட் துறை வளரும். தமிழகத்தில் ரியல் எஸ்டேட் துறை நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது; கோவையில் இத்துறையின் வளர்ச்சி நன்றாகவே உள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து, கட்டுனர்கள், புரமோட்டர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டன. 'ரெரா' கையேடு வெளியிடப்பட்டது. ஆணைய உறுப்பினர்கள் சுப்பிரமணியம், கிருஷ்ணமூர்த்தி, ஜெகநாதன், சுகுமார் சிட்டிபாபு, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.