/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டட தொழிலாளியை அடித்து கொன்றவருக்கு 'காப்பு'
/
கட்டட தொழிலாளியை அடித்து கொன்றவருக்கு 'காப்பு'
ADDED : ஏப் 15, 2025 03:34 AM

சூலுார் : கட்டட தொழிலாளியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், சூலுார் அடுத்த பாப்பம்பட்டி, காந்தி நகரை சேர்ந்தவர் மணிகண்டன், 34. மனைவியை பிரிந்து தனியாக வசிக்கும் இவர், அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சங்கரன்கோவிலில் படித்து வரும் மகனும், மகளும் விடுமுறைக்காக பாப்பம்பட்டி வந்துள்ளனர்.
மணிகண்டன் வீட்டருகே, மதுரையை சேர்ந்த சிக்கந்தர், 45, என்ற கட்டட தொழிலாளி வசித்தார். நேற்று முன்தினம் இரவு இருவரும் மது அருந்தினர். சிக்கந்தர் பரோட்டா வாங்கி வந்துள்ளார். மணிகண்டன், அவரது மகன் சாப்பிட்டனர். மகள் துாங்கி கொண்டிருந்தார். சிக்கந்தர் தகாத வார்த்தைகளில் திட்டி சிறுமியை எழுப்பியதாக கூறப்படுகிறது.
ஆத்திரமடைந்த மணிகண்டன், கிரிக்கெட் பேட்டால் சரமாரியாக அடித்ததில், சிக்கந்தர் சம்பவ இடத்திலேயே இறந்தார். சடலத்தை பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் மணிகண்டன் வீசினார். தகவலறிந்து சென்ற போலீசார், சடலத்தை மீட்டு, மணிகண்டனை கைது செய்தனர்.

