/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆற்றில் குதித்த வாலிபர் மீட்பு
/
ஆற்றில் குதித்த வாலிபர் மீட்பு
ADDED : அக் 07, 2024 12:42 AM
மேட்டுப்பாளையம் : காரமடை அருகே மங்களக்கரை புதுாரை சேர்ந்தவர் அஜித்குமார், 23. கட்டட தொழிலாளி. இவர் நேற்று, தேக்கம்பட்டியில் உள்ள வன பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றுப்பாலத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அஜித்குமார், திடீரென பாலத்தின் தடுப்பு சுவர் மீது ஏறி, பவானி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
அங்கு பணியில் இருந்த எஸ்.ஐ. ராஜனின் தலைமையிலான, மேட்டுப்பாளையம் போலீசாரின் லைப் காட்ஸ் பிரிவு போலீசார் உடனடியாக பவானி ஆற்றில் குதித்து, அஜித்குமாரை காப்பாற்றி உயிருடன் மீட்டனர். பின் பரிசல் வாயிலாக அவரை கரைக்கு கொண்டு வந்தனர்.
முதலுதவி அளித்து, பின் அஜித்குமாரின் உறவினர்களிடம் அவரை அனுப்பி வைத்தனர்.---