/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் கடைகளில் இருப்பு அறை தேவை
/
ரேஷன் கடைகளில் இருப்பு அறை தேவை
ADDED : ஏப் 03, 2025 08:37 PM
பொள்ளாச்சி:
ரேஷன் கடைகளில் சாக்கு இருப்பு அறை ஏற்படுத்த வேண்டும் என, பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகள், எம்.எல்.ஏ., நிதி மற்றும் சிறப்பு நிதிகள் வாயிலாக கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, பொருட்கள் இருப்பு அறை, சாக்கு இருப்பு வைக்கும் அறை, பொருட்கள் வினியோகிக்கும் அறைகளுடன், ரேஷன் கடைகள் காணப்படுகின்றன.
முழு நேர மற்றும் பகுதிநேர கடையாக இருந்தாலும், விற்பனையாளர் மற்றும் கட்டுனர்கள், காலை, 9:30 முதல் மாலை, 5:00 மணி வரை ரேஷன் கடையில் உள்ளனர். ஆனால், பல பகுதிகளில் செயல்படும் கடைகளில் சாக்கு இருப்பு அறை கிடையாது. பொருட்கள் வைக்கும் அறையிலேயே சாக்கு இருப்பு வைக்கப்படுகிறது.
எலி, பெருச்சாலி தொல்லையால், பொருட்கள் மட்டுமின்றி சாக்குகளும் சேதமடைகின்றன. குறிப்பிட்ட கடைகளை ஒன்றிணைந்து, சாக்கு இருப்பு அறை ஏற்படுத்தி தர வேண்டும், என, பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.