தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரிசர்வ் சைட் ஆக்கிரமிப்பு அகற்றம்

ரிசர்வ் சைட் ஆக்கிரமிப்பு அகற்றம்

ரிசர்வ் சைட் ஆக்கிரமிப்பு அகற்றம்


ADDED : ஆக 14, 2025 10:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2025 10:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போத்தனூர்; கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட, 90வது வார்டில் கோவைபுதூர் அருகே குற்றாலம் நகர் உள்ளது. 1987 ல்50 சென்ட் நிலம், வீடு கட்டும் இடமாக மாற்றப்பட்டது.

ரிசர்வ் சைட் ஐந்து சென்ட். குழந்தைகள் விளையாடும் இடத்திற்காக ஒதுக்கப்பட்டது. முறையாக உள்ளாட்சி அமைப்புக்கு ஒப்படைக்கப்படவில்லை. மாறாக அவ்விடமும் இரு வீட்டு மனைகளாக விற்கப்பட்டது.

இவ்விடத்திற்கு அருகே வசிக்கும் பாலசுந்தரம். ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மாநகராட்சி கமிஷனருக்கு, 2018ல் மனு அனுப்பினார். நடவடிக்கை இல்லாததால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட் ஆறு வாரங்களுக்குள் சட்ட நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் இருவரும் மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட மூவர் மீது ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இதில் கடந்தாண்டு மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது.

இதையடுத்து கமிஷனர் உத்தரவில் நேற்று உதவி நகரமைப்பு அலுவலர் (பொறுப்பு) மகேந்திரன் மேற்பார்வையில், பொக்லைன் இயந்திர வாகனம் வாயிலாக, இரண்டரை சென்ட் இடத்திலிருந்த கட்டடம் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு சுமார் ,50 லட்சமாகும்.

மேலும் மீதமுள்ள இரண்டரை சென்ட் இடத்தை ஆக்கிரமித்துள்ளவர் சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு போட்டுள்ளார். இதில் தீர்ப்பு வந்தபின் அவ்விடத்திலுள்ள ஆக்கிரமிப்பும் அதற்றப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

37 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது அப்பகுதியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us