sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'ரிசர்வ் சைட்' ஆக்கிரமிப்பு கட்டடம்; ஏனோ இடிக்க மறுக்கும் மாநகராட்சி! அரசு உத்தரவை மீறி 'மாற்று உபயோகம்'

/

'ரிசர்வ் சைட்' ஆக்கிரமிப்பு கட்டடம்; ஏனோ இடிக்க மறுக்கும் மாநகராட்சி! அரசு உத்தரவை மீறி 'மாற்று உபயோகம்'

'ரிசர்வ் சைட்' ஆக்கிரமிப்பு கட்டடம்; ஏனோ இடிக்க மறுக்கும் மாநகராட்சி! அரசு உத்தரவை மீறி 'மாற்று உபயோகம்'

'ரிசர்வ் சைட்' ஆக்கிரமிப்பு கட்டடம்; ஏனோ இடிக்க மறுக்கும் மாநகராட்சி! அரசு உத்தரவை மீறி 'மாற்று உபயோகம்'


ADDED : ஜூலை 03, 2025 08:53 PM

Google News

ADDED : ஜூலை 03, 2025 08:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான, 'ரிசர்வ் சைட்'டில் உள்ள கட்டடங்களை இடித்து அகற்றாமல், தமிழக அரசின் உத்தரவை மீறி, மாற்று உபயோகத்துக்கு பயன்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் முயற்சித்து வருகிறது.

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் ஏழாவது வார்டு, இந்திரா நகரில், நகர ஊரமைப்பு துறையில் அனுமதிபெறப்பட்டு, 1983ல், 3.22 ஏக்கருக்கு லே-அவுட் உருவாக்கப்பட்டது; மொத்தம், 31 மனைகள் உள்ளன. பொது ஒதுக்கீடாக, குழந்தைகள் விளையாடும் இடமாக, 25 சென்ட், கடைக்காக, 4 சென்ட் ஒதுக்கப்பட்டது.

குழந்தைகள் விளையாடுவதற்காக ஒதுக்கப்பட்ட, மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை, 2023 ஆக., மாதம், ஒரு கோடியே, 17 லட்சம் ரூபாய்க்கு காந்திபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கிரையம் (பத்திரம் எண்: 8234/ 2023) செய்திருக்கின்றனர். அவ்விடத்தை சுற்றிலும் சுவர் எழுப்பி, கேட் போடப்பட்டுள்ளது.

அங்கு, 20 சென்ட் இடத்தில், 8,000 சதுரடிக்கு ஒர்க் ஷாப் நடத்தப்பட்டு உள்ளது. அதற்கு மாநகராட்சியில் இருந்து சொத்து வரி போடப்பட்டு, குடிநீர் இணைப்பும், பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. அவ்விடத்தின் தற்போதைய சந்தை மதிப்பு, ஐந்து கோடி ரூபாய் இருக்குமென மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதேலே-அவுட்டில், மற்றொரு 'ரிசர்வ் சைட்' இடமான 7 சென்ட் இடமத்தில் ஷெட் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும். இந்த 'ரிசர்வ் சைட்'டையும் மீட்க, மாநகராட்சி நகரமைப்பு பிரிவு,எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குழந்தைகள் விளையாடும் இடத்தை ஆக்கிரமித்தவர்களால்,சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு, கடந்த ஏப்., மாதம் தள்ளுபடி செய்யப்பட்டு, மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவ்விடத்தை மீட்டு, ஆக்கிரமிப்பு கட்டடங்களைஇடித்து அகற்றி விட்டு, குழந்தைகள் விளையாடும் இடமாக மாற்றிக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், அக்கட்டடங்களில்'கோச்சிங் சென்டர்' அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

விதிமீறல்


'ரிசர்வ் சைட்'டுக்காக ஒதுக்கிய இடங்களை, மாற்று உபயோகத்துக்கு பயன்படுத்தக் கூடாது என, சென்னை ஐகோர்ட் டிவிஷன் பெஞ்ச் பல தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியிருக்கிறது. 'ரிசர்வ் சைட்'டுகளில் கட்டடங்கள் இருப்பின், அவற்றை இடித்து அகற்ற வேண்டும்; எக்காரணம் கொண்டும் வகை மாற்றம் செய்யக் கூடாதென, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதை மீறி, கட்டடங்களைபயன்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.








      Dinamalar
      Follow us