sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆக்கிரமிப்பில் ரிசர்வ் சைட்கள்

/

ஆக்கிரமிப்பில் ரிசர்வ் சைட்கள்

ஆக்கிரமிப்பில் ரிசர்வ் சைட்கள்

ஆக்கிரமிப்பில் ரிசர்வ் சைட்கள்


ADDED : மே 08, 2025 12:49 AM

Google News

ADDED : மே 08, 2025 12:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- சம்பத்குமார், கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பகுதியில் உள்ள விளையாட்டு பூங்காக்களில், ஒரு சில விளையாட்டு உபகரணங்கள், மக்கள் அமரும் இருக்கைகள் துருப்பிடித்த நிலையில் உள்ளன. இதனால், குழந்தைகள் விளையாட முடியாமலும், பெரியவர்கள் அமர முடியாமலும் அவதிப்படுகின்றனர். பூங்காக்களை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணேஷ், வால்பாறை: வால்பாறை நகராட்சியில் பல கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைத்தும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் மிக மோசமாக உள்ளது. புதர் சூழ்ந்து காணப்படும் பூங்காவிற்குள் செல்லவே அச்சப்படுகின்றனர். கோடை விழாவுக்கு முன், பூங்காவை அழகுபடுத்த வேண்டும். குழந்தைகள் விளையாடும் உபகரணங்களை புதியதாக அமைக்க வேண்டும்.

ஞானசேகரன், பொள்ளாச்சி: பூங்காக்களை பராமரித்து பசுமையாக்க வேண்டும். அப்போது தான், அமைதியான உணர்வு ஏற்படும். தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு பூங்காக்கள் பராமரிக்கப்படுகின்றன. புதர் மண்டி இருக்கும் பூங்கா இடங்களையும் பராமரிக்க வேண்டும்.மரக்கன்றுகளை வளர்த்து பறவைகளின் வாழ்விடமாக மாற்றலாம். உலக வெப்பமயமான சூழலில், பூங்காக்கள் பராமரிப்பு சுற்றுச்சூழலுக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும்.

சதீஸ்குமார், தனியார் நிறுவன ஆலோசகர்: உடுமலை ஊராட்சிகளில் முதலில் ஆக்கிரமிப்பில் இருக்கும் ரிசர்வ் சைட்களை மீட்க வேண்டும். அதில், பொதுமக்கள் பயன்படும் வகையில் விளையாட்டு பயிற்சி மையங்கள் அல்லது பூங்காக்கள் அமைக்க வேண்டும். விளையாடுவதற்கான சாதனங்கள் ஊராட்சிகளில் வழங்கப்படுகிறது. அவை முழுமையாக பொதுமக்களுக்கு சென்றடைவதில்லை.






      Dinamalar
      Follow us