/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொள்ளாச்சியை மாவட்டமாக்க ரெசிடென்சி கிளப் வலியுறுத்தல்
/
பொள்ளாச்சியை மாவட்டமாக்க ரெசிடென்சி கிளப் வலியுறுத்தல்
பொள்ளாச்சியை மாவட்டமாக்க ரெசிடென்சி கிளப் வலியுறுத்தல்
பொள்ளாச்சியை மாவட்டமாக்க ரெசிடென்சி கிளப் வலியுறுத்தல்
ADDED : மார் 27, 2025 11:50 PM

வால்பாறை: பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என, வால்பாறை ரெசிடென்சி கிளப் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வால்பாறை ரெசிடென்சி கிளப் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. புதிய தலைவராக ஏசுதாஸ், பொதுச்செயலாளராக ஷாஜூஜார்ஜ், பொருளாளராக சண்முகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில், வால்பாறையின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு தடையாக உள்ள 'சுற்றுச்சூழல் உணர் திறன் மசோதா'வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சுற்றுலா தலமான வால்பாறையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் வகையிலும், சுற்றுலா திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், துணை செயலாளர் மோகன், கவுரவ தலைவர் ஜெபராஜ், சட்ட ஆலோசகர் உத்தமராஜ், டாக்டர் கலைசெல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.