தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அடிப்படை வசதி கேட்டு குடியிருப்போர் ஆர்ப்பாட்டம்

 அடிப்படை வசதி கேட்டு குடியிருப்போர் ஆர்ப்பாட்டம்

 அடிப்படை வசதி கேட்டு குடியிருப்போர் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 09, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 05:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், அடிப்படை வசதிகள் மற்றும் அங்குள்ள மக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அறிவொளி நகர், வெள்ளலுார்,- மலுமிச்சம்பட்டி மற்றும் அறிவொளிநகர் ஆகிய நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கோரி நான்கு இடங்களில் குடியிருப்போர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகி சக்திவேல் கூறுகையில்,''இங்கு வசிக்கும் மக்களுக்கு,குடிநீர், சாலை வசதி, சாக்கடை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை. கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை. எத்தனை முறை போராட்டம் நடத்தினாலும் மாவட்ட நிர்வாகம் எங்களை கண்டுகொள்வதில்லை. தேர்தல் வருவதால் கோரிக்கையை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் போராட்டத்தை நடத்துகிறோம்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us