/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடிப்படை வசதிகள் கோரி குடியிருப்போர் ஆர்ப்பாட்டம்
/
அடிப்படை வசதிகள் கோரி குடியிருப்போர் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 06, 2024 01:47 AM

கோவை;கோவையில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, குடியிருப்புவாசிகள் செல்வபுரத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அலுவலகத்தை முற்றுகையிட்டு, நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தலைமை வகித்த இ.கம்யூ., மாநில பொருளாளர் ஆறுமுகம் பேசியதாவது: கோவை மாநகரில், பல்வேறு பகுதிகளில் குடிசைகளில் வசித்து வந்த மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு மதுக்கரை, அறிவொளி நகர், மலுமிச்சம்பட்டி, அன்பு நகர், செந்தமிழ் நகர், வெள்ளலுார் உள்ளிட்ட பகுதிகளில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் குடியமர்த்தப்பட்டு உள்ளனர்.
இங்கு குடியமர்த்தப்பட்டவர்களுக்கு, போதிய அடிப்படை வசதிகள் இல்லை. ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடங்கள் இல்லை. அடிப்படை தேவைகளை பராமரிக்கும் பொறுப்பை, உள்ளாட்சி அமைப்புகள் செய்து கொடுக்கவில்லை.
ஆழ்துளை கிணறுகளில் உள்ள மோட்டார்களை பராமரித்து, உள்ளாட்சி நிர்வாக குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்கான தண்ணீரை வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், குடியிருப்புவாசிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

