ADDED : மார் 04, 2024 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர்:அருந்ததியர் சமூக பொது நல அறக்கட்டளையின் மாவட்ட செயற்குழு கூட்டம், பேரூரில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில், அறக்கட்டளையின் செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். துணை தலைவர் மாறன், துணைச் செயலாளர் திருமலைச்சாமி முன்னிலை வகித்தனர். தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில், வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டன. வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வில் வெற்றி பெற்று, ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு உதவ, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி வகுப்பில் கூடுதல் மாணவர்களை சேர்த்து, அவர்களுக்கு உதவ வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி வகுப்புக்கு, தொடர்ந்து வருகைபுரிந்த மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

