/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குற்றங்களை தடுக்க போலீஸ் கண்காணிப்பு வாகனங்கள் இயக்க கட்டுப்பாடு
/
குற்றங்களை தடுக்க போலீஸ் கண்காணிப்பு வாகனங்கள் இயக்க கட்டுப்பாடு
குற்றங்களை தடுக்க போலீஸ் கண்காணிப்பு வாகனங்கள் இயக்க கட்டுப்பாடு
குற்றங்களை தடுக்க போலீஸ் கண்காணிப்பு வாகனங்கள் இயக்க கட்டுப்பாடு
ADDED : அக் 10, 2025 10:19 PM

பொள்ளாச்சி; தீபாவளி பண்டிகையையொட்டி, பொள்ளாச்சி கடைவீதியில் பாதுகாப்பு வழங்கவும், குற்ற சம்பவங்களை தடுக்கவும், கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி, வரும், 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகையை கொண்டாட மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.துணிக்கடைகள் அதிகம் நிறைந்துள்ள கடைவீதி, கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில், பாதுகாப்பு வழங்கவும், குற்ற சம்பவங்களை தடுக்கவும், கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
போலீசார் கூறியதாவது:
தீபாவளி பண்டிகையையொட்டி கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு போலீசார், ஆயுதப்படை போலீசார், போக்குவரத்து போலீசார் இணைந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், பொதுமக்கள் பொருட்களை எடுத்துச் செல்லும் போது கவனமுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறது. சாதாரண உடைகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருட்டு, குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த, ஒலிபெருக்கி வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
நெரிசல் தவிர்க்க... பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அவ்வழியாக நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. ரோட்டின் முகப்பு பகுதியில், பேரிகார்டுகள் வைத்து இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீதிக்குள் இருசக்கர வாகனங்களும் அனுமதியில்லை. வாகனங்களை வெளியே நிறுத்தி நடந்து செல்ல அறிவுறுத்தப்படுகிறது. மேலும், கடை உரிமையாளர்களும், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும்.
சரக்கு வாகனங்கள், போக்குவரத்து குறைந்த இரவு நேரங்களில் வந்து கடைகளில் சரக்குகளை இறக்கலாம். காலை, 8:00 மணிக்கு பின் சரக்கு வாகனங்களை அனுமதிக்கமுடியாது.
இவ்வாறு, கூறினர்.