/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இருசக்கர வாகனம் திருடியவர் கைது
/
இருசக்கர வாகனம் திருடியவர் கைது
ADDED : அக் 10, 2025 10:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, இருக்கர வாகனத்தை திருடிய நபரை கோமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே, கெடிமேடு தனியார் ேஹாட்டல் முன் குருசாமி என்பவர், கடந்த மாதம், 5ம் தேதி இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். அந்த வாகனம் திருட்டு போனது குறித்து கோமங்கலம் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டனர். அதில், மலையாண்டிப்பட்டணத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ்,24, என் பவர் இருசக்கர வாகனத்தை திருடியது தெரிந்தது. அவரை கைது செய்து, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இவர் மீது ஏற்கனவே, மூன்று திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.