/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீண்டும் முளைக்கும் சாலையோர கடைகள்; காற்றில் பறக்கும் கோர்ட் உத்தரவு
/
மீண்டும் முளைக்கும் சாலையோர கடைகள்; காற்றில் பறக்கும் கோர்ட் உத்தரவு
மீண்டும் முளைக்கும் சாலையோர கடைகள்; காற்றில் பறக்கும் கோர்ட் உத்தரவு
மீண்டும் முளைக்கும் சாலையோர கடைகள்; காற்றில் பறக்கும் கோர்ட் உத்தரவு
ADDED : செப் 19, 2024 09:58 PM

பொள்ளாச்சி: 'கோர்ட் சொன்னாலும், நாங்க கேட்க மாட்டோம், இப்படித்தான் வியாபாரம் செய்வோம்' என, நெடுஞ்சாலை ஓரத்தில் கடைவிரிக்கும் வியாபாரிகளால், போக்குவரத்து பாதிக்கிறது.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், நெடுஞ்சாலையோரம் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து காணப்பட்டது. தனிநபர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட் உத்தரவிடப்பட்டது.
அதன்படி, கடந்த வாரம், நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், ஆக்கிரப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக, பாலக்காடு ரோடு, உடுமலை ரோடு, கோவை ரோடு, பல்லடம் ரோடு என, முக்கிய வழித்தடங்களில், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர்.
தள்ளுவண்டிக் கடைகள், கடைகளுக்கு முன் சாலையை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த தற்காலி ெஷட், சிமென்ட் தரைத்தளம் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில், மீண்டும் தள்ளுவண்டிக்கடைகள் அமைக்கவும், தற்காலிக ெஷட் அமைக்கவும் பலர் முயற்சித்து வருகின்றனர்.
'கோர்ட் சொன்னாலும், நாங்க கேட்ட மாட்டோம், இப்படித்தான் வியாபாரம் செய்வோம்,' என்று அலட்சியமாக, மீண்டும் கடையை விரித்து வருகின்றனர்.
தன்னார்வலர்கள் கூறியதாவது: சாலையோரத்தில், தள்ளுவண்டி கடைகள், தற்காலிக கடைகள் அமைத்து, வியாபாரம் செய்வதால், அங்கு தாறுமாறாக வாகனங்கள் நிறுத்துகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசலும், விபத்தும் ஏற்படுகிறது.
சாலையோரத்தில் இனி ஆக்கிரமிப்பு செய்ய கூடாது. மீறினால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தும், சிலர், மீண்டும் கடைகளை அமைத்து வருகின்றனர்.
குறிப்பாக, ஓம்பிரகாஷ் பங்க், சூளேஸ்வரன்பட்டி பகுதியில், ஆளும்கட்சி பிரநிதிகளின் ஆசியோடு, தள்ளுவண்டிக் கடைகள் முளைத்துள்ளன. இதற்கு, ஆரம்ப கட்டத்திலேயே நெடுஞ்சாலைத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.