/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அமேசான்' உள்ளூர் கடைகள் திட்டம்: சில்லறை விற்பனையாளர்கள் மகிழ்ச்சி

ADDED : மார் 02, 2024 10:42 PM

கோவை;அமேசான் நிறுவனத்தின், 'அமேசான் உள்ளூர் கடைகள்' திட்டத்தின் கீழ், இதுவரை தமிழகத்தில் , 41 ஆயிரம் சில்லறை விற்பனையாளர்கள் இணைந்துள்ளனர்.
இத்திட்டத்தில் சமீபத்தில் இணைந்த, கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்த, விவியன்ஜூலியஸ் என்பவருக்கு இணைந்த ஒரே மாதத்தில், 25 ஆர்டர்கள் கிடைத்துள்ளன. உள்ளூர் கடைகளை டிஜிட்டல் ஸ்டோர்களாக மாற்ற, இத்திட்டம் மிகவும் உதவிகரமாக அமைந்துள்ளது.
விவியன்ஜூலியஸ் கூறுகையில், ''கோவை காந்திபுரத்தில் எலிக்சிர் கம்ப்யூட்டர்ஸ் என்னும் பெயரில் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன் உதிரி பாகங்கள் கடையை நடத்தி வருகிறேன். பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய அமேசானில் இணைந்தேன். முதல் மாதமே, 25 ஆர்டர்கள் கிடைத்தன. பயிற்சியும் அவர்களே வழங்குகின்றனர்,'' என்றார்.
அமேசான் உள்ளூர்கடைகள்' திட்டப் பிரிவு தலைவர் அபிஷேக்ஜெயின் கூறுகையில், ''நாடு முழுவதும் எங்கள் 'அமேசானில் உள்ளூர்கடைகள்' திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் இதுவரை, 41 ஆயிரம் உள்ளூர் ஆப்லைன் கடைகள் இணைந்துள்ளன,'' என்றார்.