/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செங்குளம் கரையில் தடுப்புச்சுவர் பணி விறுவிறு; உருவாகப் போகிறது இணைப்பு சாலை
/
செங்குளம் கரையில் தடுப்புச்சுவர் பணி விறுவிறு; உருவாகப் போகிறது இணைப்பு சாலை
செங்குளம் கரையில் தடுப்புச்சுவர் பணி விறுவிறு; உருவாகப் போகிறது இணைப்பு சாலை
செங்குளம் கரையில் தடுப்புச்சுவர் பணி விறுவிறு; உருவாகப் போகிறது இணைப்பு சாலை
ADDED : ஏப் 14, 2025 11:08 PM

கோவை,; சுண்டக்காமுத்துார் ரோட்டில் இருந்து குளத்துப்பாளையம் வழியாக பாலக்காடு ரோடு வரும் வகையில், செங்குளத்தின் கரையில் கோவை மாநகராட்சி சார்பில தடுப்புச்சுவர் கட்டி, இணைப்பு சாலை உருவாக்குவதற்கான பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
குனியமுத்துார் அருகே உள்ள செங்குளம், 265 ஏக்கர் பரப்பு கொண்டது. முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கினால், அருகாமையில் உள்ள தோட்டங்களில் நீரூற்று ஏற்படுவது வழக்கம். சில ஆண்டுகளுக்கு முன் பருவ மழை பெய்த சமயத்தில், 1,000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
இச்சூழலில், செங்குளம் அருகே குளத்துப்பாளையத்தில், 6 ஏக்கர் பரப்பளவில் அடுக்குமாடி குடியிருப்புகளை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டி வருகிறது.
செங்குளம் நிரம்பினால், இப்பகுதிக்கும் தண்ணீர் வரும் என்பதால், கரையை பலப்படுத்தி, தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்றும், கரைப்பகுதியில் தார் சாலை அமைத்தால், குளத்துப்பாளையம் மற்றும் சுண்டக்காமுத்துார் ரோட்டுக்கும், பாலக்காடு ரோட்டுக்கும் இணைப்பு கிடைக்கும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அ.தி.மு.க., ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு, வேலை துவங்க இருந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், இப்பணி கிடப்பில் போடப்பட்டது. தற்போது இச்சாலையின் அவசியத்தை உணர்ந்து, உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியில், 14 கோடியே, 48 லட்சத்து, 28 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
குளக்கரையின் இருபுறமும் தடுப்புச்சுவர் கட்டுதல், பாலம் அமைத்தல், ரோடு போடுதல், மின் கம்பங்களுடன் தெருவிளக்குகள் அமைத்தல் என, நான்கு பணிகளாக பிரித்து செய்யப்படுகின்றன.
இதில், குளத்தின் கரைப்பகுதிகளில் தடுப்புச்சுவர் எழுப்பி, மையப்பகுதியில் மண் கொட்டி, சமப்படுத்தப்படுகிறது.