ADDED : பிப் 05, 2024 01:26 AM
அ நிறம் | அளவு
கோவை, பிப். 5-
ஓய்வு பெற்ற பொது இன்சூரன்ஸ் அசோசியேஷன் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நஞ்சப்பா ரோட்டில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மண்டல அலுவலகம் முன், தர்ணா போராட்டம் நடந்தினர்.
ஹெல்த் இன்சூரன்ஸில் இருந்து ஜி.எஸ்.டி.,யை நீக்க வேண்டும், ஓய்வு பெற்றவர்கள் குழு சுகாதார காப்பீட்டு பிரீமியத்தை தவணைகளில் செலுத்த அனுமதிக்க வேண்டும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகள் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, இந்த தர்ணாவை நடத்தப்பட்டதாக, சங்கத்தின் பொது செயலாளர் நித்யானந்தன் தெரிவித்தார்.
