/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க கூட்டம்
/
ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க கூட்டம்
ADDED : ஆக 14, 2025 08:34 PM

பொள்ளாச்சி; தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நல சங்கத்தினர் மாதாந்திர கூட்டம், பொள்ளாச்சி போலீஸ் சமுதாய கூடத்தில் நடந்தது. முதற்கட்டமாக நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
இதில், கவுரவ தலைவராக காசிவிஸ்வநாதன், மாவட்ட தலைவராக செல்வராஜ், செயலாளர் பாலன், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் மைக்கேல் சகாயராஜ் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் என மொத்தம், 22 புதிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ., சண்முகவேலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக அரசு, ஒரு கோடி ரூபாய் நிதி கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற காவலர்கள் முதல், அதிகாரி வரை அனைவரையும் சங்கத்தில் இணைக்க முழு முயற்சிகள் எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.