/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சொந்த ஊர் திரும்பிய மக்கள்; 25 சிறப்பு பஸ்கள் இயக்கம்
/
சொந்த ஊர் திரும்பிய மக்கள்; 25 சிறப்பு பஸ்கள் இயக்கம்
சொந்த ஊர் திரும்பிய மக்கள்; 25 சிறப்பு பஸ்கள் இயக்கம்
சொந்த ஊர் திரும்பிய மக்கள்; 25 சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : அக் 10, 2024 11:56 PM
பொள்ளாச்சி : ஆயுத பூஜை தொடர் விடுமுறையை ஒட்டி, பொள்ளாச்சி பணிமனைகளில் இருந்து, 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, தொடர்ந்து 3 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், வெளியூர்களில் இருந்து வந்து, தொழில் நிமித்தமாக வசிக்கும் மக்கள், நேற்று சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
குறிப்பாக, கோவையில் இருந்து, தென்மாவட்டங்களுக்கு பொள்ளாச்சி மார்க்கமாக பஸ்கள் இயக்கப்படுவதால், பழைய பஸ் ஸ்டாண்டில் வழக்கத்துக்கு மாறாக, பயணியர் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் எந்த வித சிரமமின்றி அவரவர் ஊர் செல்ல, 25 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
பஸ்கள் இயக்கம் குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், 'பொள்ளாச்சி பணிமனைகளில் இருந்து, 20 சிறப்பு பஸ்கள், கோவை, சிங்காநல்லுார் வழியாக மதுரை, தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டன.
இதேபோல, 5 சிறப்பு பஸ்கள், உடுமலை, பழநி மார்க்கமாக இயக்கப்பட்டன. பயணியர் கூட்டத்திற்கு ஏற்ப, இரவு முழுவதும் இந்த பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.