/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூன்று ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் அதிகாரி ஆய்வு
/
மூன்று ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் அதிகாரி ஆய்வு
ADDED : மார் 09, 2024 10:39 PM
கோவை:கோவையில், மூன்று ஓட்டுச்சாவடிகளில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாஹு நேரில் ஆய்வு செய்தார்.
கோவை மற்றும் பொள்ளாச்சி லோக்சபா தொகுதிகளுக்கு, தேர்தல் முன்னேற்பாடுகள் செய்திருப்பது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாஹு நேற்று முன்தினம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.
சட்டசபை தொகுதி வாரியாக அமைக்கப்படும் ஓட்டுச்சாவடிகள், வாக்காளர் பட்டியல், பணியில் ஈடுபடுத்த உள்ள அலுவலர்கள் உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்தார். கடந்த தேர்தலில் எந்தெந்த பகுதிகளில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது என, போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதன்பின், துடியலுாரில் உள்ள வித்ய விகாசினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அசோகபுரம் என்.ஜி.ஜி.ஓ., காலனி அரசு மேல்நிலைப்பள்ளி, பிரஸ் காலனியில் உள்ள தம்பு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடிகளுக்கு, தேர்தல் அதிகாரி நேரில் சென்று பார்வையிட்டார். அங்குள்ள வசதிகள் குறித்து, தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அப்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செந்தில்வடிவு உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

