ADDED : செப் 04, 2025 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களால், வருவாய்த்துறையினரால் வழக்கமான பணி மேற்கொள்ள முடிவதில்லை. மூன்றாண்டுக்கு மேலாக, காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. வருவாய்த்துறையில் மேற்கொள்ளும் பணிகளுக்கு போதிய அவகாசம் வழங்கக்கோரி, இரண்டாம் நாளாக நேற்று, வருவாய்த்துறையினர் 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்தனர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணை பொது செயலாளர் செந்தில்குமார் கூறுகையில், வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர்களுக்கு இடையே உள்ள ஊதிய முரண்பாட்டை களைதல், உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.