/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வருவாய் கோட்டாட்சியர் பதவி ஏற்பு
/
வருவாய் கோட்டாட்சியர் பதவி ஏற்பு
ADDED : ஜூலை 31, 2025 10:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியராக ராமகிருஷ்ணன் பதவி ஏற்றார். இவர் இதற்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றி வந்தவர்.
தற்போது பணி மாறுதல் பெற்று, கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியராக பதவி ஏற்றார். ஏற்கனவே இங்கு வடக்கு வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த கோவிந்தன், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு மாறுதல் செய்யப்பட்டார். புதியதாக பதவியேற்ற கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணனுக்கு அரசு அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

