/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
/
வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : பிப் 23, 2024 12:18 AM
கோவை;தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம் சார்பில், கோவை மாவட்ட வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களின் முன்பும் பணியை புறக்கணித்து, 440 அலுவலர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வருவாய் அலுவலர்கள் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி, மூன்று கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட போராட்டதில் நேற்று அலுவலர்கள் களம் இறங்கியுள்ளனர்.
இப்போராட்டத்தில், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள இடங்களை நிரப்புதல், சான்றிதழ் வழங்கும் பணிக்கு புதிய துணை வட்டாச்சியர் பணியிடங்களை ஏற்படுத்துதல், திட்ட பணிகளை மேற்கொள்ள உரிய அவகாசம் அளித்தல் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
கோவை கலெக்டர் அலுவலகத்தில், 30 பேர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே போன்று, அனைத்து வருவாய் அலுவலகங்களிலும் போராட்டம் நடந்தது. மாலை, 5:45 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டு, அலுவலர்கள் கலைந்து சென்றனர்.
தொடர்ந்து, இன்றும் காத்திருப்பு போராட்டம் தொடரும் என, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டத்தில் நடந்த போராட்டங்களுக்கு, மாவட்ட துணைத்தலைவர் சையது உசேன், மாநில செயலாளர்கள் செந்தில்குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் தலைமைவகித்து வழிநடத்தினர்.