sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

8 ஆயிரம் பயனாளிகளுக்கு பட்டா வழங்க இலக்கு! திணறும் வருவாய்த்துறை அதிகாரிகள்

/

8 ஆயிரம் பயனாளிகளுக்கு பட்டா வழங்க இலக்கு! திணறும் வருவாய்த்துறை அதிகாரிகள்

8 ஆயிரம் பயனாளிகளுக்கு பட்டா வழங்க இலக்கு! திணறும் வருவாய்த்துறை அதிகாரிகள்

8 ஆயிரம் பயனாளிகளுக்கு பட்டா வழங்க இலக்கு! திணறும் வருவாய்த்துறை அதிகாரிகள்


ADDED : டிச 31, 2024 04:51 AM

Google News

ADDED : டிச 31, 2024 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: தமிழகத்தில், தாலுகா அளவில், 8 ஆயிரம் பயனாளிகளுக்கு பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதற்கான இடங்களை தேர்வு செய்ய முடியாமல், வருவாய் அதிகாரிகள் திணறுகின்றனர்.

தமிழகத்தில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள தகுதியான மக்களை தேர்வு செய்து, இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, ஒவ்வொரு தாலுகாவிலும் வருவாய் அலுவலர்கள், ஏற்கனவே வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு, கிராம கணக்குகளில் திருத்தம் செய்யாமல் உள்ளவர்களுக்கும், கணக்கு திருத்தம் செய்து வழங்கவும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, நத்தம்புறம்போக்கு, அனாதை இனம், கல்லாங்குத்து, வண்டிப்பாதை உள்ளிட்ட இடங்களை தேர்வு செய்ய ஆவணங்களை சரிபார்த்தும் வருகின்றனர்.

ஆனால், ஒவ்வொரு தாலுகாவிலும், 8 ஆயிரம் பயனாளிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவால், அதற்கான இடங்களைக் கண்டறிய முடியாமல் வருவாய் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

அதிலும், கடந்த, 1991, 1992ல், நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பட்டா வழங்கி, கிராம கணக்குகளில் சேர்க்காத பட்டா விபரங்களைக் கண்டறிந்து, அதனை தற்போது வழங்கியதுபோல, கணக்கு காட்டவும் உத்தரவிடப்பட்டுள்ளதால், அதிருப்தி அடைந்துள்ளனர்.

வருவாய்த்துறையினர் கூறியாதவது:

தமிழகத்தில், 5 லட்சம் பயனாளிகளுக்கு பட்டா வழங்க இலக்கு உள்ளது. ஆனால், அதற்கான இடத்தைக் கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் என பலரும், அரசுக்கு சொந்தமான நிலங்களை கையப்படுத்தி உள்ளதால், அதனை மீட்க முடிவதில்லை.

இதுதவிர, ஏற்கனவே பட்டா பெற்றவர்கள் மீண்டும் பட்டா கோருவது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றிரண்டு நபர்கள் பெற முற்படுகின்றனர். அரசியல் கட்சியினர் தலையீடு காரணமாக வழக்கமான பணியை தொடரவும் இயவில்லை.

இதற்கு முன் இருந்ததுபோல, மாவட்டந்தோறும், நத்தம் நிலவரித் திட்டத்திற்கு, 'செட்டில்மென்ட் தாசில்தார்'களை நியமித்து, பட்டா வழங்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us