/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னையில் காண்டாமிருக வண்டு முதிர்ந்த இலை நீக்கினால் தீர்வு உண்டு
/
தென்னையில் காண்டாமிருக வண்டு முதிர்ந்த இலை நீக்கினால் தீர்வு உண்டு
தென்னையில் காண்டாமிருக வண்டு முதிர்ந்த இலை நீக்கினால் தீர்வு உண்டு
தென்னையில் காண்டாமிருக வண்டு முதிர்ந்த இலை நீக்கினால் தீர்வு உண்டு
ADDED : மார் 15, 2024 11:59 PM
கோவை:கோவையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு, வறண்ட வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை, 37-38 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-26 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாக வாய்ப்புள்ளது.
காலை நேர காற்றின் ஈரப்பதம் 70 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் 20 சதவீதமாகவும் இருக்கும். சராசரியாக காற்று மணிக்கு, 8-10 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.
பகல், இரவு நேர வெப்பநிலை சராசரியை விட, 1 சதவீதம் கூடுதலாக உயர வாய்ப்புள்ளது. காற்றின் ஈரப்பதம் குறைந்து வருகிறது; மண் ஈரத்தினை பொறுத்து, இறவை பயிர்களுக்கு நீர்பாசனம் செய்து, பயிர் கழிவு மூடாக்கு இடவேண்டும். தென்னை மரங்களில் காண்டா மிருக வண்டு தாக்கம் தென்படுகிறது. இதனை கட்டுப்படுத்த வயது முதிர்ந்த இலைகளை நீக்கிவிட்டு, ஒரு மரத்திற்கு 3 முதல் 4 பூச்சி உருண்டைகளை இடவேண்டும்.
போரேட் குருணை மருந்தை 5 கிராம் அளவில், காடாதுணியில் கட்டி இரு மட்டைகளுக்கு இடையில் வைக்கவும். ஆறு மாத இடைவெளியில், மீண்டும் ஒரு முறை வைக்கவும்.
கறவை மாடுகளுக்கு, தேவைப்படும் பசுந்தீவனங்களான, தீவனச்சோளம் மற்றும் கம்பு நேப்பியர் ஒட்டு புல்லினை, 30 சதவீத இறவை சாகுபடி பகுதியில் வளர்ப்பதன் வாயிலாக, கோடையில் பால்மாட்டின் தீவன தேவையை பூர்த்தி செய்யலாம்.
இத்தகவலை, வேளாண் பல்கலை காலநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

