/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரிசி விலை கிலோவுக்கு 3 ரூபாய் உயர்ந்து விட்டது! பிரியாணி அரிசியில் மாற்றம் இல்லை
/
அரிசி விலை கிலோவுக்கு 3 ரூபாய் உயர்ந்து விட்டது! பிரியாணி அரிசியில் மாற்றம் இல்லை
அரிசி விலை கிலோவுக்கு 3 ரூபாய் உயர்ந்து விட்டது! பிரியாணி அரிசியில் மாற்றம் இல்லை
அரிசி விலை கிலோவுக்கு 3 ரூபாய் உயர்ந்து விட்டது! பிரியாணி அரிசியில் மாற்றம் இல்லை
ADDED : பிப் 05, 2026 05:13 AM

கோவை: கர்நாடகாவிலிருந்து அரிசி வரத்து குறைந்ததால், கோவையில் அரிசி விலை கிலோவுக்கு மூன்று ரூபாய் உயர்ந்துள்ளது.
தமிழகத்துக்கு தேவையான அரிசி மற்றும் நெல் ரகம் கர்நாடக மாநிலத்திலிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. கோவையில் விற்பனையாகும் பல்வேறு பிராண்ட் பெயர்களில் விற்பனையாகும் ஐந்து அரிசி ரகங்கள், கர்நாடக மாநிலத்தில் இருந்துதான் வருகின்றன.
ஜனவரியில்நடந்த அறுவடையில் கிடைத்த நெல் ரகங்களை விற்பனைக்கு அனுப்பாமல்,அம்மாநில வியாபாரிகள் இருப்பு வைத்தனர். அதனால் தமிழகத்துக்கு நெல் வரத்து குறைந்தது;அரிசி விலை உயர்ந்துள்ளது.
கோயமுத்துார் அரிசி வியாபாரிகள் சங்க செயலாளர் சரவணக்குமார் கூறியதாவது:
கர்நாடக மாநிலத்தில் மூன்று போகம் நெல் விளைவிக்கின்றனர். துங்க பத்திரை அணையின் வழியோரங்களில் உள்ள கங்காவதி, சிருகுப்பா, சிந்தனுார் போன்ற பகுதிகளில் பொன்னி அரிசிக்கான நெல் விளைகிறது.
தற்போது துங்கபத்திரை அணை பராமரிப்பு பணி துவங்குவதால், அம்மாநில அரசு அறிவித்ததின் பேரில், விவசாயிகள் இந்த போகத்தில் நெல் விளைவிக்கவில்லை.
அதனால் நெல் மற்றும் அரிசிக்கு, கர்நாடகாவிலேயே டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.அரிசி விலை உயர்வுக்கு இதுதான் முக்கிய காரணம். கோவையில் கிலோவுக்கு 3 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.
அடுத்த மாதம் ஆந்திராவில் ராயலசீமா மற்றும் தெலுங்கானாவில் நெல் அறுவடை துவங்க உள்ளது. தற்போதைய விலை உயர்வு இன்னும் அதிகரிக்குமா அல்லது குறையுமா என்பது, அங்கிருந்து வரும் வரத்தை பொறுத்தே வியாபாரிகள் முடிவு செய்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.

